தமிழிலக்கிய உலகில், உடற்குறையுற்ற படைப்பாளிகள் மற்றும் கவிதை ஆர்வலர்கள் ஆங்காங்கே விரவியிருப்பதை பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். படைப்புத்திறன் கொண்ட இத்தகைய திறமையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு கூட்டுக் கவிதைத் தொகுப்பை வெளியிடவேண்டும் என்பது என் எதிர்கால விருப்பம். பல புதிய கவிஞர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவிருக்கும் அம்முயற்சி ஈடேறும் நாளை எண்ணியபடி என் எழுத்துப் பயணத்தைத் தொடர்கிறேன்.
அன்புடன்,
கவிஞர் ஏகலைவன். (9944391668)
சேலம், தமிழ்நாடு

No comments:
Post a Comment