Tuesday, October 7, 2008

சிரிப்பு!


எப்படிச் சிரித்தாலும்
தோற்றுப்போகிறேன்,
ஏதாவது ஒரு
குழந்தையிடம்.

- ஆனந்தன் (9787336195)
திருப்பூர், தமிழ்நாடு.

Monday, October 6, 2008

அம்மா! தாயே!


ஊரெல்லாம் அவளை
'மலடி' என்றார்கள்,
ஆனால்.....
வாசலில் பிச்சை கேட்பவன்
வாய்நிறைய அழைத்தான்...
"அம்மா!" என்று!

- 'வானவில் நண்பன்' எம்.செல்வகுமார்
பாடிபுது நகர், சென்னை.
(9841677500)

Sunday, October 5, 2008

மழலைகள்.....



இமயம்கூட எழுந்து நடக்கும்,
மழலைகளின்
மாறாத முயற்சி எண்ணி....

மரணம்கூட மரித்துப்போகும்
மழலைகளின்
புன்னகையை எண்ணி...!

- 'இமயம்' பா, ஜெயகுமார்
எண்ணமங்கலம், ஈரோடு மாவட்டம்.

உறவு!


நிமிடங்கள் மறைந்தாலும்
நினைவுகள் மறைவதில்லை
காலங்கள் கலைந்தாலும்
கனவுகள் கலைவதில்லை.
உயிர் பிரிந்தாலும்
நம் உறவு பிரிவதில்லை!

- 'வானவில் நண்பன்' எம். செல்வகுமார்
(9841677500)
பாடிபுதூர், சென்னை.

Saturday, October 4, 2008

நகரவாசிகள்!


எப்போதும் பேசுகிறார்கள்
கைப்பேசிகளில்,
யாரோடும் பேசாத
நகரவாசிகள்!

- ஜே. வசந்தராஜா (9486579791)
நெய்வேலி.

வாழ்க்கை!


நீர் நிறைந்த ஆழ்கிணற்றில்
விழுந்த
உடைந்த பானையில் சில்லாய்
பயணிக்கிறது
எனது இந்த வாழ்க்கை,
அறியப்பட்டமுடிவொன்றை
முன்வைத்து.

- கவிஞர் யாழி, கோவை.
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)

அம்மணத்தில் அழகு!


இன்னும் இன்னும்
'அம்மண'மாக்கினேன்,
அழகாய் இருக்கிறது....
மனம்!

- எம். ஞானசேகரன் (9842579597)
புதுவை.