
எதையோ எழுத நினைத்து
எதையெதையோ எழுதினேன்,
எதுவும் எனக்கே புரியாதபோது...
இமைமூடி இருளில்
தொலைந்தேன்.
யாருக்கும் தெரியாமல்
எழுதாத பக்கங்களையும்
இருளில் புரட்டிப் புரட்டிப்
படிக்கிறது
என் வீட்டு மின்விசிறி!

தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment