Monday, September 13, 2010

எங்கள் நன்றி.

அன்புடையீர், வணக்கம்.

12.09.2010 அன்று தமிழ்நாடு, திருச்சி மாநகரில் நிகழ்ந்த "குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கவிஞர்கள், இதழாளர்கள் குடும்பச் சந்திப்பு சிறப்புடன் நடந்தது. 70 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் அன்பர்கள் வந்திருந்து சிறப்பித்தனர்.

திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்" என்னும் நூல் திருச்சி ஈ.வெ.ரா. பெரியார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வாசுதேவன் அவர்களால் வெளீயிடப்பட்டது. தொடர்ந்து, கவிஞர்கள், இதழாளர்கள் அறிமுகம், கவிதை வாசிப்பு, "பாரதியே! மீண்டும் பிறந்து வா!" என்னும் தலைப்பில் கவிதைப்போட்டி ஆகியவை நிகழ்ந்தன.

இப்போட்டியில் முதல் பரிசை அந்தியூர் கவிஞர் விநாயகமூர்த்தி அவ்ர்களும், இரண்டாம் பரிசை சேலம் கவிதாயினி திருமதி சுமதி அவர்களும், மூன்றாம் பரிசை திரு ஷ்ரீ காந்த் அவர்களூம் பெற்றனர்.

தொடர்ந்து, கவிஞ்ர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளும், கலந்துரையாடலும் நிகழ்ந்தன.

விழாவை சிறப்பாக நடத்த இடமளித்து உதவிய பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி தலையாசிரியர் திரு. பாலு அவர்களுக்கு எஙகள் நன்றி. இதற்கு முன்நின்று உதவிய எங்கள் சக படைப்பாளர் திரு. ஆர். அப்துல் சலாம் அவர்களுக்கும், ஆலோசனைகளைத்தந்து உதவிய திரு. தி.மா.சரவணன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

விழவுக்கான பங்கேற்பாக நன்கொடையளித்து உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றி.

விரைவில் இத்தளத்தில் விழாவின் புகைப்படங்கள் வெளியாகும்.

அன்புடன்,

கிரிஜா மணாளன்
அ.ச.அருள்முருகன்.

Tuesday, September 7, 2010

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு மற்றும் ஆண்டுவிழா!

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.
தமிழ்நாடு.

நிகழ்ச்சிகள்:

குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்
கவியரங்கம்
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.
இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -
கலந்துரையாடல்
மற்றும்
நகைச்சுவை விருந்து.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


- கிரிஜா மணாளன்