Monday, October 20, 2008

டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்ற, நமது நண்பர் கவிஞர் 'கோவை யாழி'யின் கவிதை!


("வடக்கு வாசல்" மாத இதழின் நான்காம் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் விழா மேடையில் வாசிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட கவிதை இது!)

நேற்றை தாங்கிய குறிப்புகளில்
இன்று எழுதிய பின்னும்
தெரியாத நாளைக்கே
மிச்சமாய்
நிறைய பக்கங்கள்!


- கவிஞர் யாழி
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
திருச்சி மாவட்டக்கிளை உறுப்பினர்)
கோவை, தமிழ்நாடு.

காந்தி ஜெயந்தி அன்று
பயமுறுத்துகிறது...
'கோட்ஸே'யின் நினைவு!

- கா. அமீர்ஜான் (9840954846)
திருநின்றவூர், தமிழ்நாடு.

நீ என்னை
நேசிக்காவிட்டாலும்,
நான் உன்னை
நேசித்துக்கொண்டேயிருப்பேன்.
ஏனெனில்,
உன்னோடு வாழ்வதில் மட்டுமல்ல,
உன் நினைவுகளோடு
சாவதிலும்
சந்தோஷம் எனக்குள்!

- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Sunday, October 19, 2008

அம்மா!


உயிர் பிரியும்போதும்
அதே பாசத்தோடு
சொல்கிறாள் அம்மா....
"பார்த்துப் போ!"

- ஸ்ரீமதி
குறிஞ்சிப்பாடி, தமிழ்நாடு.

Friday, October 17, 2008

சாதி?


பள்ளியில் சேர்க்கையில்
'சாதி'யைக் கேட்டார்கள்...
சமத்துவபுர குழந்தையிடம்!

- ஜே.வசந்தராஜா (9486579791)
நெய்வேலி, தமிழ்நாடு.

ஓ....என் மேகமே!


அழகிய உன் முகம்
பார்க்கத்துடித்தேன்,
நீ
அதிசய பாராமுகம் காட்டி
மறைந்தாய்...
ஓ...என் மேகமே!

- கோமதி
கரூர், தமிழ்நாடு.

Thursday, October 16, 2008


நீ கருவறை முன்பு
கண்மூடி நின்றாலும்
இருண்டுவிடுகிறது
என் உலகம்.

- எஸ். சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

வறுமை!


வசதியில்லாத நான்...
வறுமையோ வசதியாய்
என்னுடன்.

- எஸ்.பாண்டியன் (9865483234)
கரூர், தமிழ்நாடு.

Tuesday, October 14, 2008

அன்பின் ஆழம்.......


என் விழிப்பூக்களின்
பனித்துளிகள் சொல்லும்
உன் அன்பின் ஆழத்தை!

- ஸ்ரீமதி, குறிஞ்சிப்பாடி
தமிழ்நாடு.

Sunday, October 12, 2008

மௌனம்!


ஒருதுளி ரத்தம்கூட
சிந்தவில்லை,
ஆனாலும் வலிக்கிறது
அவளின் மௌனம்.

- மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.

Saturday, October 11, 2008

கிறுக்கல்


வாசிக்க இயலாத
கிறுக்கலான கவிதை
மழலை கையெழுத்து
திடீர் மழைக்கு
கலர் கலராய்
கரையும் கடவுள்
தெரு ஓவியம்.

- பூதலூர் பூமிகாந்த்.
பூதலூர், தஞ்சை மாவட்டம்.

Friday, October 10, 2008

ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!



அன்பார்ந்த கவிஞர்களே!
இத்தளத்தில் பிரசுரமாகும் உங்கள் கவிதைகளுக்கு நேயர்கள் வழங்கிவரும் பாராட்டுக்களையும், விமரிசனங்களையும் தொகுத்து, உங்களுக்கு அஞ்சலிலோ, மின்னன்ஞ்சலிலோ அனுப்ப விரும்புகிறேன். எனவே, உங்கள் அஞ்சல் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை கீழ்க்காணும் என் அலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டுகிறேன்.
உங்கள் வளர்ச்சியே எனது மகிழ்ச்சி!

அன்புடன்,

கிரிஜா மணாளன்
Editor/smskaavignarkal-world.blogspot.com

Tuesday, October 7, 2008

திருஷ்டிப் பூசணிக்காய்!



கழிந்ததோ என்னவோ திருஷ்டி,
கழித்து எறியப்பட்ட
பூசணிக்காயில்
வழுக்கி விழுந்தவனின்
தலை சிதறி
ஒழிந்தது வாழ்க்கை!

- ஆர். ராஜ்குமார் (மங்களம் மைந்தன்)
(9944878032)
திருவெறும்பூர், திருச்சி 620013.

எனது நன்றி!


இத்தளத்துக்கு வருகைதந்து, எங்கள் அன்புக்குரிய இளங்கவிஞர்களின் கவிதைகளை வாசித்து, தங்களுடைய பாராட்டுக்களை "அன்புடன் குழுமம்" பகுதியில் எனக்குத் தெரிவித்துள்ள அனைத்து தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் எனது நன்றி!


- கிரிஜா மணாளன்.

ஒற்றுமை!


உரசி எரியும் முன்
ஒற்றுமையாய்த்தான் இருந்தன
பெட்டிக்குள் தீக்குச்சிகள்.

- எஸ். பட்டுராஜ் (9976772310)
கோவை 41.

சிரிப்பு!


எப்படிச் சிரித்தாலும்
தோற்றுப்போகிறேன்,
ஏதாவது ஒரு
குழந்தையிடம்.

- ஆனந்தன் (9787336195)
திருப்பூர், தமிழ்நாடு.

Monday, October 6, 2008

அம்மா! தாயே!


ஊரெல்லாம் அவளை
'மலடி' என்றார்கள்,
ஆனால்.....
வாசலில் பிச்சை கேட்பவன்
வாய்நிறைய அழைத்தான்...
"அம்மா!" என்று!

- 'வானவில் நண்பன்' எம்.செல்வகுமார்
பாடிபுது நகர், சென்னை.
(9841677500)

Sunday, October 5, 2008

மழலைகள்.....



இமயம்கூட எழுந்து நடக்கும்,
மழலைகளின்
மாறாத முயற்சி எண்ணி....

மரணம்கூட மரித்துப்போகும்
மழலைகளின்
புன்னகையை எண்ணி...!

- 'இமயம்' பா, ஜெயகுமார்
எண்ணமங்கலம், ஈரோடு மாவட்டம்.

உறவு!


நிமிடங்கள் மறைந்தாலும்
நினைவுகள் மறைவதில்லை
காலங்கள் கலைந்தாலும்
கனவுகள் கலைவதில்லை.
உயிர் பிரிந்தாலும்
நம் உறவு பிரிவதில்லை!

- 'வானவில் நண்பன்' எம். செல்வகுமார்
(9841677500)
பாடிபுதூர், சென்னை.

Saturday, October 4, 2008

நகரவாசிகள்!


எப்போதும் பேசுகிறார்கள்
கைப்பேசிகளில்,
யாரோடும் பேசாத
நகரவாசிகள்!

- ஜே. வசந்தராஜா (9486579791)
நெய்வேலி.

வாழ்க்கை!


நீர் நிறைந்த ஆழ்கிணற்றில்
விழுந்த
உடைந்த பானையில் சில்லாய்
பயணிக்கிறது
எனது இந்த வாழ்க்கை,
அறியப்பட்டமுடிவொன்றை
முன்வைத்து.

- கவிஞர் யாழி, கோவை.
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)

அம்மணத்தில் அழகு!


இன்னும் இன்னும்
'அம்மண'மாக்கினேன்,
அழகாய் இருக்கிறது....
மனம்!

- எம். ஞானசேகரன் (9842579597)
புதுவை.