Tuesday, June 30, 2009

"சுவாமி விவேகானந்தா விருது" பெற்றுள்ள செல்வி சி. கலைவாணி



இவர் நமது கவிதைத் தளத்திலும், பிற தளங்களிலும் தொடர்ச்சியாக தனது கவிதைகளை வழங்கி, வாசகர்களை மகிழ்வித்துவரும் செல்வி சி. கலைவாணி (அரியூர், வேலூர் மாவட்டம்)
பள்ளியிலும். கல்லூரியிலும் ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ள இவர், இப்போது "மதுரை பாரதி யுவ கேந்திரா" அமைப்பு வாயிலாகவும் "சுவாமி விவேகானந்தா விருது" பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செல்வி சி. கலைவாணிக்கு என் சார்பிலும், எங்கள் "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளை சார்பிலும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620 021.

யுவஸ்ரீ கலாபாரதி விருது.


இசை, பரதநாட்டியம், விளையாட்டு, ஓவியம், யோகா, UC MAS, ABACUS மற்றும் பிற துறைகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் மதுரை, பாரதி யுவகேந்திரா அமைப்பு வழங்கிவரும் "யுவஸ்ரீ கலாபாரதி" விருது பற்றிய அறிவிப்பு இது.

- கிரிஜா மணாளன்

Friday, June 26, 2009

தோழன்!



அடம்பிடித்து அழுகிறது மனம்
அமைவது கடினமென்றாலும்,
துயரம் வரும் தருணங்களிலும்
துன்பம் தொடரும் வேளைகளிலும்
தோள் சாய்த்து ஆறுதல்பெற
தோழனொருவன் வேண்டுமென்று!

- சி. கலைவாணி
அரியூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

மணம்!


மணம்!
---------
மண்ணில் மணம் வீசும்
மலர்களைவிட
என்னுள் மலர்ந்த உன்
இடைவிடாத காதல் மணம்
அண்டவெளியிலும்கூட
ஆக்ரமித்து வீசுகிறது!


- சி. கலைவாணி
அரியூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

Thursday, June 25, 2009

கனவுக் கோட்டை!




புதுப்பிக்க முயன்று தோற்றுப்போகிறேன்
உன்னால் இடித்துத் தள்ளப்பட்டு
விழுந்துகிடக்கும்
என் கனவுக் கோட்டையை.


- சி. கலைவாணி
அரியூர், வேலூர் மாவட்டம்,
தமிழ்நாடு.

சிதறல்!

விபத்தில் சிக்கி
சுயநினைவிழந்து
இடமாற்றமாகிவிட்டது
இரு இதயங்கள்.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட
கண்களின் கவனச் சிதறலால்!

- தே. ரம்யா,
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

மௌனம்.









ஆயுதங்களோடுதான் நிற்கிறேன்
இருந்தும் துளைத்துவிடுகிறது என்னை
உன் மௌனம்.

- கவிஞர் அமீர்ஜான் (9840954846)

Saturday, June 13, 2009

என்று தணியுமிந்த ஏக்கப் பெருமூச்சு?


வாழ்வாதாரமே
கேள்விக்குறியாய்
வளமான எதிர்காலமே
கானல்நீராய்
கனன்ற இதயத்துடனும்
குருதி சிந்தும்
கண்களுடனும்
புண்பட்ட ஈழத்தமிழரின்
புலம்பலும் பெருமூச்சும்
என்றுதான் தணியும்?

அடித்து நொறுக்கப்பட்டது
அகிம்சையைப் போதித்த
புத்தபிரான் திருக்கோயில்!
ஆதரவைத் தேடி ஈழத்து வீதிகளில்
அம்மகானே அலையும் நிலை!

சத்தியம் ஈழத்தில்
சாகடிக்கப்பட்டதால்
புத்தநெறிகளே அங்கே
புண்பட்டுப் போனது!

துடிதுடித்துச் சாவோரின்
துயரப் புலம்பலோடு
குடிதண்ணீர் குழாய்கள்கூட
குருதியாய் வடிக்கிறது!

வெறியாட்டம் ஆடுகின்ற
வேங்கைகளாய் சிங்களர்கள்
தறிகெட்டு அலைந்தபடி
தமிழ் இரத்தம் பருகுகின்றார்!

இறந்து கிடக்கும் ஈழத்தாய்களின்
இரத்தம் வடியும் மார்புகளில்
குழந்தைகள் வாய்வைத்து
குருதியைத்தான் பருகும் நிலை!

எங்கெங்கும் மரண ஓலம்
எதிரொலிக்கும் மயானபூமியில்
தங்கிடுமோ ஓருயிரேனும்
தமிழீழம் மலரும் நாளில்?


- கலைத்தாமரை ராஜேஸ்வரி
மதுரை-20.