Thursday, November 27, 2008


அவ்வப்போது
துளிர்க்கிறது கண்ணீர்
என் ஞாபக பரணில்
தூசி தட்டும்போதெல்லாம்.

- பி.கே. ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு

அடிக்கடி என் பெட்டியை
மோப்பம் பிடிக்கும்
என் செல்ல நாய்க்கு
தெரியாது
உதிரத்தால் எழுதப்பட்ட
காதல் கடிதமொன்று
அதன்
உள்ளே இருப்பது.

- பி.கே.ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு.

அந்த வார்த்தைகள்!


உயிர்ப்பித்திருக்கிறது
ஆழமான ஒன்றை,
உன் ஜீவனுள்ள
சொற்கள் தாங்கிய
அந்த வார்த்தைகள்!

- பி.கே.ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு.

முடியவில்லையே!


அருகில் இருந்தும்
பேசமுடியாமல்,
உரிமையிருந்தும்
கேட்கமுடியாமல்,
நண்பர்கள்......
தேர்வுக்கூடம்!

- 'வானவில் நண்பன்'
எம். செல்வகுமார்
பாடி புதுநகர், தமிழ்நாடு.

நானே!

உன்னை
நானே நேசித்து
நானே நெருங்கி
நானே தழுவி
நானே விலகி
நானே கோபித்து
நானே வெறுத்து
சமாதானமாகிவிடும்
நெடுந்தொடரொன்று
நெடுநாட்களாய் எனக்குள்
நிகழ்ந்து வருவது
உனக்குத் தெரியுமா உயிரே?


- "ரத்திகா"
திருச்சி, தமிழ்நாடு.

Tuesday, November 25, 2008

மௌனம்!


உன் அன்பின் அடர்வை
உணர்த்தியது
வருத்தங்களின் பொருட்டு
ஊடலாய் இழைந்தோடும்
நீ பேசாமல் தவிர்த்த
தருணங்கள்.

- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

சமாதானப் புறா!


சுதந்திரதினத்தில்
பறக்கவிட
சிறைபிடிப்பு,
சமாதானப் புறா!

- எம். அக்பர் (9894303726)
கோவை, தமிழ்நாடு.

Saturday, November 22, 2008

செல்ஃபோன் ஆபத்துக்கள்!






தொலைபேசி/அலைபேசி ஆகிய சாதனங்கள், நமது தொலைத்தொடர்பு வசதிக்கு மிக மிக உதவியாயிருப்பது உண்மைதான்! ஆனால், அவைகளை நெடுநேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளைப் பற்றி மருத்துவர்கள் நமக்கு அடிக்கடி அறிவுறுத்திவருவதையும் நாம் கவனித்து, அதன்படி நடக்கவேண்டும்.

தொலைபேசியில் 17.5 நிமிடத்துக்கு மேலோ, அலைபேசி (Mobile)யில் 12.5 நிமிடத்துக்கு மேலோ தொடர்ந்து பேசுவது காதிலுள்ள மிருதுவான செவிப்பறையைப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேற்கண்ட நிமிடங்களுக்கு மேல் பேசவேண்டியிருந்தால், 3 நிமிடங்கள் இடைவெளி விட்டுப் பேசுவது நல்லது.
(சென்னை, அப்போல்லோ மருத்துவ மனையின் E.N.T. ஸ்பெஷலிஸ்ட் Dr. ரவீந்திரன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.)

தகவல்: சென்னிமலை சி.பி. செந்தில்குமார்.

Wednesday, November 19, 2008

வெளிச்சம்?


/>

ஆயிரமாயிரம் தீபங்கள்
ஆலயங்களில்
வெளிச்சமென்னவோ
நூலகங்களில் திறப்பின்றி!

- "ரத்திகா" (9842421500)
திருச்சி, தமிழ்நாடு.

Sunday, November 16, 2008

மௌனம்!


ஆறாத ரணங்களை
உண்டாக்குகிறது,
கூரிய வாளையொத்த
வார்த்தைகளைவிட
உன் முனை மழுங்கிய
மௌனம்.

- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.


நிலவில் நடப்படும்
தேசீயக்கொடி
நாளை விண்வெளிச் சுற்றுலாவுக்கு
முன்னோடி.
வசப்பட்டது நம் கனவு!

- அ. கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.

Thursday, November 13, 2008

அன்பின் அருமை!


வாசிக்கத் தெரிந்த
விரல்களுக்குத்தான் தெரியும்
வீணையின் அருமை..
நேசிக்கத் தெரிந்த
இதயங்களுக்குத்தான் தெரியும்
அன்பின் அருமை!

- எம்.எஸ்.மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.

உனக்காக!


உயிர்போகும் நேரம்கூட
உன்னதமானதுதான்
அது
உனக்காக என்றால்!

- பா. ஜெயகுமார் (9842163703)
அந்தியூர், தமிழ்நாடு.

பயணம்.........


அடர்ந்துகொண்டே வரும்
உன் மௌனத்தில்
வளர்ந்துகொண்டே போகிறது
பாலைநிலத் தாவரங்கள்
நிறுத்தவியலா என் பயணத்தில்
குறுக்கும் நெடுக்குமாய்
முட்களின் கீறல்கள்
எனக்குமுன் பயணித்தவர்களின்
உதிரச்சுவடுகளில்
என் பாதங்கள்..
ஒரு பிரளயமல்லாது
தகர்க்கமுடியா மௌனக்கதவுகள்.

- "ரத்திகா"
திருச்சி, தமிழ்நாடு.

Monday, November 10, 2008

இதுவரை இத்தளத்தை அலங்கரித்த கவிஞர்கள்!


இதுவரை இத்தளத்தில் 50க்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

அக்கவிஞர்கள்:

ரத்திகா- திருச்சி இ.சங்கர்-செய்யார், சி.கிருஷ்ணமூர்த்தி- தாரா மங்கலம், பா.ஜெயகுமார்-அந்தியூர், ராஜீவ்காந்தி-செய்யார், சரவணராஜ்-கோவை, மோகன்ராஜ்-திருப்பூர், கௌதமன்-திருச்சி, அமீர்ஜான் - திருநின்றவூர், ‚மதி-குறிஞ்சிப்பாடி, வசந்தராஜ-நெய்வேலி, கோமதி-கரூர், எஸ். பாண்டியன் - கரூர், பூமிகாந்த் - பூதலூர், ஆர்.ராஜ்குமார்-திருவெறும்பூர், பட்டுராஜ்-கோவை, ஆனந்தன் - திருப்பூர், செல்வகுமார்-பாடிபுதூர், பா.ஜெயகுமார்-எண்ணமங்கலம், யாழி - கோவை, ஞானசேகரன் - புதுவை, ரம்யா-கொட்டக்குளம், சந்தோஷ்குமார்-புதுவை, ஜோதிகார்த்திக்-திருச்சி, எம்.எஸ்.குமரன் - வளவனூர், மஞ்சுளா-மதுரை, ஆங்கரை பைரவி-லால்குடி, பாபு-திருச்சி, கோவிந்தராஜன் - சுப்பிரமணியபுரம், சி. கலைவாணி-ஆரியூர், சுரேஷ்ராஜன் -லால்குடி, கொள்ளிடம் காமராஜ்-திருச்சி.

அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றி!
தொடர்ந்து உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பிற கவிஞர்கள் தங்கள் கவிதைகளும் இத்தளத்தில் இடம்பெற விரும்பினால், அலைபேசி: 9940966667 என்ற எண்ணுக்கு SMS செய்ய வேண்டுகிறேன்.

- கிரிஜா மணாளன்.

Sunday, November 9, 2008

காதல்!


கடவுள், கற்பகத்தரு,
காமதேனு, காந்தர்வ உலகம்,
அமுதசுரபி, பாரிஜாத மலர்,
இவைகள்போல....
இருந்துவிட்டுப் போகட்டுமே
நமது அன்பிற்கான
ஒரு பெயரும்
'காதல்' என்று!

- 'ரத்திகா'
திருச்சி. தமிழ்நாடு.

வருத்தம்!


வண்டுகள் ஏதும் வரவில்லை
வருத்தப்பட்டது
பிளாஸ்டிக் பூ!

- இ. சங்கர் (9789527975)
செய்யார், தமிழ்நாடு.

Saturday, November 8, 2008

கைக்குழந்தையாய்.....


இருவருக்கும் வயதானாலும்
இன்னும் கைக்குழந்தையாகவே
இருக்கிறது
நம் காதல்!

- சி. கிருஷ்ணமூர்த்தி (9942666936)
தாராமங்கலம், தமிழ்நாடு.

Thursday, November 6, 2008

எரிமலை!



அடர்ந்த மின்னலாய்
அத்துமீறின ஆசைகள்...
ஆசையுடன்
அணைக்கத் துடித்தேன்
என்னவளை...
அருகில் சென்றபின்தான்
உணர்ந்தேன்
என்னவள் ஒரு
எரிமலை என்று!

- பா. ஜெயக்குமார் (9842163703)
அந்தியூர், தமிழ்நாடு.

பாலுக்காக.....!


பாலுக்காக அழுது அழுது
எச்சில் விழுங்கி
பசியாறுகின்றன
ஈழத்தமிழர் படுகொலையில்
தாயினை இழந்த
குழந்தைகள்!

- ராஜீவ் காந்தி (9445454704)
செய்யார், தமிழ்நாடு.

அது......நீ!


எனக்கென்று
அசையாத சொத்து
எதுமில்லை...
அசையும் சொத்து
ஒன்றேயொன்று,
அது......நீ!

- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Wednesday, November 5, 2008

சூரியகாந்தி!


உன் பார்வை ஒளியில்
மலர்கின்றன
என் வீட்டு
சூரியகாந்திப் பூக்கள்!

- சி. கிருஷ்ணமூர்த்தி (9942666936)
தாராமங்கலம், தமிழ்நாடு.

கண்ணீர்!


கண்ணீர் சிந்தும்போதுகூட
கவலையில்லை எனக்கு,
காரணம்...
என்றுமே என்
கண்ணீரைத் துடைக்க
உங்கள் கைகள்
இருக்குமென்ற
நம்பிக்கையுடன்!

- மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.

மழலைச் சொற்கள்!


எந்த தேச மொழியென
வியப்புறுகிறேன்
இயல்பாய்
இனிமையாய்ப் பேசும்
அந்தக் குழந்தைகளின்
மழலைச் சொற்களைக்
கேட்கும்போது!

- கவிஞர் கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.

Tuesday, November 4, 2008

இரத்ததானம்!



இறக்கும்போது
என் இரத்தத்தை
உனக்கு தானம் செய்ய
விரும்புகிறேன்....
அப்படியாவது
உன் இதயத்துக்குள்
சென்றுவிடலாமே என்று!

- மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.