Sunday, April 26, 2009

கவிஞர் ஏகலைவனின் சீரிய முயற்சி!

தமிழிலக்கிய உலகில், உடற்குறையுற்ற படைப்பாளிகள் மற்றும் கவிதை ஆர்வலர்கள் ஆங்காங்கே விரவியிருப்பதை பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். படைப்புத்திறன் கொண்ட இத்தகைய திறமையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு கூட்டுக் கவிதைத் தொகுப்பை வெளியிடவேண்டும் என்பது
என் எதிர்கால விருப்பம். பல புதிய கவிஞர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவிருக்கும் அம்முயற்சி ஈடேறும் நாளை எண்ணியபடி என் எழுத்துப் பயணத்தைத் தொடர்கிறேன்.

அன்புடன்,

கவிஞர் ஏகலைவன். (9944391668)
சேலம், தமிழ்நாடு

Saturday, April 25, 2009

பூவும் பொட்டும்!

இறந்த கணவனின்
படத்துக்குப் போனது
அவளது பூவும், பொட்டும்.

- எஸ். ராஜ்குமார் (9944848801)
கருமண்டபம், திருச்சி,
தமிழ்நாடு.

பிரமிடுகள்









ரசிக்கமுடியவில்லை
அடிமைகளின் உழைப்பை,
பிரமிடுகள்.

- வி.ம. செல்வகுமார் (9942198018)
செய்யாறு. தமிழ்நாடு.

மரம்!










உழைப்பென்னும் விதையூன்றி
விடாமுயற்சியெனும் நீரூற்றி
தன்னம்பிக்கையெனும் உரமிட்டு
தளிர்விட்டு வளரும்
வளமான வாழ்க்கையெனும்
மரம்...நமக்கு வரமாக!

- சி. கலைவாணி
அரியூர், வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு.

மழலைச் சிரிப்பு!









ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போகிறேன்
ஏதாவதொரு குழந்தையின்
அழகானச் சிரிப்பில்!

- பாலா (9944346601)
ஈரோடு, தமிழ்நாடு.

ஜோசியக் கிளி!









யாரிடம் கேட்கும்
தன் எதிர்காலம் பற்றி,
ஜன்னல் வைத்த சிறையில் சிக்கி
சீட்டெடுத்துப் போடும் அந்த
ஜோசியக் கிளி?


- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.