Sunday, January 18, 2009

"சிறந்த நூல்களுக்கான சிறப்புப் பரிசு" பெற்றுள்ள எங்கள் படைப்பாளர்களைப் பாராட்டுகிறோம்!

"திருச்சி மாவட்ட நலநிதிக் குழு" ஆண்டுதோறும், மாவட்டத்திலுள்ள எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கி, கௌரவித்து வருகிறது.
அதன்படி, 2007, 2008 ஆண்டுகளுக்கான சிறந்த நூல்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 17.01.2009 அன்று திருச்சி மாநகரில் தமிழக அரசு சார்பில் நிகழ்ந்த "பொங்கல் கலைவிழா"வில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு அவர்கள் எழுத்தாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி. பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இவ்விழாவில் எங்கள் "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின், திருச்சி மாவட்டக் கிளையின் உறுப்பினர்களான கீழ்க்காணும் படைப்பாளர்கள் பரிசுகளைப் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறந்த சிறுகதை நூல்:

முதல் பரிசு: ரூ5000/- திரு. ஆங்கரை பைரவி சிறுகதை நூல்: "பின்னிருக்கையில் ஒரு போதி மரம்')

சிறந்த கவிதை நூல்:
இரண்டாம் பரிசு: ரூ. 3000/- திரு. கொட்டப்பட்டு சக்திவேலன் (கவிதை நூல்: "மனிதா! மனிதா!)

ஊக்கப் பரிசு: ரூ. 1000/- திருமதி. "ரத்திகா" (கவிதை நூல்: தேய்பிறையின் முதல் நாளிலிருந்து..)

சிறந்த சிற்றிதழ்:

இரண்டாம் பரிசு: திரு. த. சந்திரசேகரன் (ஆசிரியர் - "இனிய நந்தவனம்' மாத இதழ்)

------------------------------------------------------------------------------------
அனைவரையும் வாழ்த்துகிறோம்!


- கிரிஜா மணாளன்
செயலாளர் / திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620021.

மின்னஞ்சல்: girijamanaalanhumour.gmail.com

Wednesday, January 14, 2009

வலி?









குளத்தில் நீராட்டி
கொம்புக்கு வண்ணம் தீட்டி
அலங்கரிக்கும் முதலாளிக்குத்
தெரியுமா....
முரட்டுத்தனமாய் முன்பொரு நாள்
பிரம்பால் அடித்து
மாட்டின் முதுகில் ஏற்படுத்திய
காயத்தின் வலி
இன்னும் தொடர்வது?

- அ. ராஜீவ் காந்தி (9786098440)
செய்யார், தமிழ்நாடு.

Monday, January 12, 2009

பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!





அனைவருக்கும் எனது பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

- கிரிஜா மணாளன்
Editor

Sunday, January 11, 2009

பாவக்கணக்கு!



கோயில் வாசலில் கையேந்தி
யாசிக்கும் இரவலனைப் புறக்கணித்து
கோயில் உண்டியலில்
கொண்டுபோய்ச் சேர்த்தேன்
என் காணிக்கையை.
கடவுள் கண்சிமிட்டிச் சிரித்தபடி
வரவு வைத்துக்கொண்டார்
என் கணக்கில்
இன்னொரு பாவத்தை!

- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Thursday, January 8, 2009

கவிஞர் அ. ராஜிவ் காந்தியின் கவிதைகள்.



1. காரணமின்றி நிகழ்கிறது தொடர்கொலைகள்
என் காலுக்கடியில் சிக்கும்
எறும்புகளாய்.


2. எந்த போகியிலும் கொளுத்தப்படுவதேயில்லை
மனிதர் மனதில் குவிந்து கிடக்கும்
குப்பைகள்.



கவிஞர் அ.ராஜிவ் காந்தி அவர்களின், "முதுமை" என்ற இக்கவிதை "அன்புடன் குழுமம்" (கூகுள் இணையதளம்) பார்வைக்கு வைக்கப்பட்டு, அக்குழும நண்பர்கள் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


- கிரிஜா மணாளன்

Friday, January 2, 2009

விளை நிலங்கள்!


அறுவடை முடிந்ததும்
விற்பனைக்கு வந்தன
வீட்டு மனைகளாக
விளைநிலங்கள்!

- சி. கலைவாணி
அரியூர், வேலூர், தமிழ்நாடு.