Wednesday, August 5, 2015


சாதனைச் சரித்திரமாய் கடைக்கோடி மண்ணில் கனவுமேகமாய் சூல்கொண்டான்! பல கனவு எண்ணங்களுக்கு கார்மழையானான், கலைமகளின் கரம்பற்றிட! கட்டுமரம் ஏறினான் உயரப் பறந்தான் உருவமில்லாக் காற்றைச் சிறகுகளாக்கி! அச்சம் தவிர்த்து அண்டங்களைப் பிரசவித்தான்! ஆண்மை தவறாது நடைபயின்றான்! புனிதகுரானைக் கைக்கொண்டு புண்ணியகீதையைப் பேச்சாக்கி, புதிய ஏற்பாட்டை சுவாசித்து! பூலோகம்சுற்றினான் கனவுகாண்! கனவுகாண்! எனக் கனல்மூட்டிக் கவிபாடினான்! விஞ்ஞானத்தைக் காதலித்து விருட்சமானான்! சப்தமிடும் அரசியல் தவளைகளுக்கு இடையில், சப்தமில்லாமல் சாதனைப் படைத்து, சரித்திரமானான்! -- கவிதாயினி பாரதி பாக்கியம், தேனி.

No comments: