உலகத் தந்தையர் தினம் - 2016
உன்
பெயரின் முதலெழுத்துக்குச் சொந்தக்காரர்!
பெற்றோர் என்பதன்
தலைப்புக்காரர்!
குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு!
குறையிலாப் பாசத்தின் பிரதிபலிப்பு!
அன்னைக்குச் சமமாய் அன்புகாட்டி
உன்னை வளர்ப்பதில் வழிகாட்டி!
ஆலோசனை அளிப்பதில் ராஜதந்திரி!
குடும்ப
ஆட்சியில் அவரே முதல் மந்திரி!
அப்பா என்னும் உச்சரிப்பில்
அகவுகின்றது அவரின் பாசப்பிணைப்பு!
தந்தை மகற்காற்றும் நன்றியென
தமிழ்க்கவி வள்ளுவன் உரைத்ததுபோல்,
சிந்தையில் உன்னை என்றும் நிறுத்தி
சீரான வாழ்வளிக்கும் வள்ளல் அவர்!
தந்தைசொல் மிக்க மந்திரம் ஏது?
தவறாமல் அதனை ஏற்றால்
தலைநிமிரும் உன் வாழ்வு!
== தந்தையைப் போற்றுவோம்!==
- செல்வி
ஜெபமாலை மரியண்ணன்
காஞ்சிபுரம்,
தமிழ்நாடு
No comments:
Post a Comment