Wednesday, August 26, 2009

திருச்சி மாநகரில்....."குறுஞ்செய்தி" இதழாசிரியர்கள்/கவிஞர்கள் சந்திப்பு (SMS journals Editors & poets Meet - 2009 at Tiruchi)




ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!
===============================
“குறுஞ்செய்தி இதழாளர்கள் (SMS இதழாசிரியர்கள்) மற்றும் படைப்பாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி” வருகிற 13.09.2009 ஞாயிறுஅன்று, திருச்சி மாநகரத்தில் நிகழவிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள “குறுஞ்செய்தி இதழாளர்கள்/ படைப்பாளர்கள்” (SMS journal editors & poets) அனைவரும் இதில் கலந்துகொண்டு, ஏனைய படைப்பாளர்கள்/இதழாளர்களைச் சந்தித்து மகிழவும், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஓர் அரிய வாய்ப்பாக அமையுமென்று நம்புகிறோம்.

நிகழ்ச்சி: 13.09.2009 (ஞாயிறு) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை.

நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்: காஜாமியான் மேனிலைப் பள்ளி, (தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் எதிர்புறம்) மன்னார்புரம், திருச்சி 620020.

ஹைக்கூ தொகுப்பு வெளியீடு: நமது கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் அடங்கிய தொகுப்பு அன்றைய சந்திப்பின்போது வெளியிடப்படவிருக்கிறது. குறுஞ்செய்தி இதழாசிரியர்களும், அவ்விதழ்களைச் சார்ந்த கவிஞர்களும் தங்களது படைப்புகளை SMS மூலம் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

மற்றும் விவரங்கள் விரைவில் இணையதளத்திலும், அலைபேசி குறுந்தகவல் வாயிலா கவும் அனைவருக்கும் அறிவிக்கப்படும்.

அழைப்பிதழ் பெறும் நண்பர்கள் அனைவரும் தங்கள் வருகையைப் பதிவுசெய்து எங்களது ஏற்பாடுகளுக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


ஒருங்கிணப்பாளர்கள் :

கிரிஜா மணாளன்
அலைபேசி: 9952422383)

அ. கௌதமன்
அலைபேசி: 9994368626)

(திருச்சி மாவட்டக் கிளை / உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)

Monday, August 24, 2009

நமது கவிஞருக்கு "தமிழ்மாமணி" விருது!



வாழ்த்துவோம்!
=============

நமது ‘உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் - திருச்சி மாவட்டக்கிளை’யைச் சேர்ந்த
அன்பிற்குரிய, கவிஞர் திரு கொட்டப்பட்டு ப. சக்திவேலன் அவர்களுக்கு
தஞ்சாவூர் “தமிழ்த்தாய் அறக்கட்டளை” அமைப்பு, “தமிழ்மாமணி” என்னும் விருதினை அளித்துக் கௌரவித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் திருச்சி தமிழ்ச்சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு பொன்னவைக்கோ அவர்கள் கவிஞருக்கு இந்த விருதினை வழங்கி வாழ்த்தினார்.

நமது அமைப்பிலுள்ள அனைத்து உறுப்பினர்கள் சார்பாக அவருக்கு நமது நல்வாழ்த்துக் களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது தொடர்புக்கு, அலைபேசி எண்: 9443638947


- கிரிஜா மணாளன்
செயலாளர் / திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620 021, (தமிழ்நாடு)

Sunday, August 23, 2009

சுமை!


சுமை!
======

ஒற்றை விரலில் மலை சுமந்த
கண்ணனும் பின்வாங்குவான்,
புத்தகப் பொதி சுமக்கும்
எங்கள் பிள்ளைகளின்
முகச்சுழிப்பு கண்டு.


- ப. தியாகு (9659906769)
கோவை, தமிழ்நாடு.
Email: pa.thiyagu@yahoo.in

Wednesday, August 12, 2009

சுமை!
=====

கங்காருவைப்போல் நான்
தூக்கிச் சுமந்த துக்கங்கள்
தாமாகவே விடைபெற்றுக்கொள்கின்றன
உன் மடியில் என்னை நீ
ஏந்திக்கொள்ளும்போது.

- ப. தியாகு (9659986769)
கோவை, தமிழ்நாடு.

---------------------------------------
தவம்
====

ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்கு
நதிக்கரையில்
நீருக்காக.

- ஆர். நாகராஜ் (9965015776)
மதுரை. தமிழ்நாடு.

-------------------------------------



உயிர்!
=====
ஒவ்வொரு உயிரற்ற
பொம்மைகளிடமும் இருக்கிறது
குழந்தைகளின் உயிர்.

- வெ.ராம்குமார் (9865244918)
வேலூர், தமிழ்நாடு.
------------------------------------

சர்வதேச இளைஞர்தினக் கவிதை
===============================

முடிந்தால் முடியும்!
===================
இளைஞனே!
உன்னால் முடியும்,
எதையும் வெல்வதற்கு!
சகோதரனே!
உன்னால் முடியும்,
எதையும் சந்திப்பதற்கு!
உன் கையில் உளி எடுத்து
கருத்தோடு நீ
கல்லை உடைத்தால்,
கல்லும் கலைச்சிற்பமாய் உருவெடுக்கும்!
உருக்கொடுக்கும் உன்
சாதனைக்குக் கைகொடுக்கும்!

- கவிதாயினி தே. ரம்யா
கொட்டக்குளம் (திருவண்ணாமலை)
தமிழ்நாடு.
======================================