Saturday, December 17, 2011

ஓர் புதிய அறிமுகம்!



வண்க்கம்!

நமது 'குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப'த்தில் புதிய அங்கமாக் இணைந்திருக்கும் சகோதரி திருமதி கு. தமயந்தி (கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு) தனது கவிதையொன்றை, முதன்முறையாக இணையதளத்தின். வார்ப்பு.காம் கவிதைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சிறப்பான அவ்ரது கவிதையை பாராட்டி, அவரது கவித்திறமை உலகளாவிய வாசகர்களையும் மகிழ்விக்குமென்ற நம்பிக்கையுடன் வாழ்த்தி. அக்கவிதையை இங்கே பதிவிடுகிறேன்.


- கிரிஜா மணாளன்
====================================================

2011 விட்டுச் சென்ற....
-----------------------------------

விட்டு சென்ற உன் நினைவை மட்டும்
உயிர் காற்றாய் சுவாசிக்கிறேன்
தொட்டு பேசும் அலைகரைப்போல்
எனக்குள் நானே தினம் பேசுகிறேன்
விழியால்பேசிய வெண்மதியே,
கசங்கிய காகிதமாய் எனை எறிந்தாய்.
முகிலுக்குள் முழுமதியாய் இன்று நீ மறைந்தாய்.
நம் கால்பட்ட இடமெல்லாம்,
கானலாய் தெரிகிறது-உன்
விரல் பற்றிய கரம் இன்று,
நெருப்பின்றி எரிகிறது.
எடுத்துக்கொள் உயிரை என்று நீ சொல்லி விட்டு
எங்கேயடி பறந்தாய்,எனை
கண்ணீரில் தள்ளி விட்டு.
மூச்சிமட்டும் இருக்கிறது,உயிர் என்னை வெறுக்கிறது,
உறக்கம் வர மறுக்கிறது.
உள்ளம் உன்னை கான துடிக்கிறது.
நீ விட்டு சென்ற சுவடு
நானாக...........
என் வாழ்நாள் போனதடி
உன்னால் வீணாக.................


கு.தமயந்தி,
கள்ளக்குறிச்சி. (தமிழ்நாடு)

No comments: