Friday, February 13, 2009

'துப்பட்டா'வின் துயரகீதம்!

சுடிதாரின் 'உடன் பிறப்பான' துப்பட்டா,
தன் சோகத்தை
வெளிப்படுத்துவதுபோல்
அமைந்த 'ஒப்பாரி' பாடல்.
----------------------------------------

துப்புக் கெட்டத் தனமாத்தான்
"துப்பட்டா'வா பொறந்துட்டேன் - என்னெ
தப்புத் தப்பா உடுத்திக்கிட்டு
தறிகெட்டு அலையுதுங்க........


மடிசாரா பொறந்துருந்தா
மாமிகள கவர்ந்துருப்பேன்!
சுடிதாரு ஒடன்பொறந்து
சொகங்கெட்டுப் போனேனே......


கோவணமா பொறந்துருந்தா
கோடிபேரு மானம் காப்பேன் - இந்த
பாவசென்மம் எடுத்துப்புட்டு
பவுசுக் கெட்டு நிக்கறேனே......


மாருமேல போட்டுக்கிட்டா
மானந்தான் காத்துடலாம் - சும்மா
'பேருக்கு'ப் போட்டுக்கிட்டா
பெரயோசனம் ஏதுமில்லே....


கழுத்தச் சுத்தி போட்டுக்கிட்டு
கண்ட ஸ்டைலு பண்ணுதுங்க.. எவனும்
இழுத்துக்கிட்டு போறதுக்கு
எடங்குடுத்தா என்னாவும்?


கண்ட கண்ட எடத்துலெல்லாம்
கட்டிக்கிட்டு அலயறீக....-அத
காணச் சகிக்கலேம்மா - ஒங்க
கண்றாவி நாகரீகம்!


உக்காரும் எடத்துலெல்லாம்
ஒட்டிக்கிற தூசித் தட்ட
'துப்பட்டா' நானென்ன
'தொடப்பமா' ஒங்களுக்கு......?


பின்னால தொங்கவுட்டா
'பெரயோசனம்' இல்லேயம்மா..
தன்னால தெரிஞ்சிக்கணும்..- நா
'தண்டோரா' போடமாட்டேன்.....!


தாவணிய மறந்தீக
நம்ம தமிழ்நாட்டு பொண்ணுகள்ளாம்
பாவமாத்தான் இருக்கு - உங்கள
பாக்கறவன் பார்வையால!


முந்தானையும் தாவணியும்
முழுசா மறந்தாச்சு - இப்போ
எந்த பொண்ணும் அதுகளத்தான்
ஏறெடுத்தும் பாக்கறதில்லே!


பொண்ணோட மானங்காக்கும்
பொறுப்புக்கு நானிருக்கேன் - அத
எண்ணாம திரியுறீக
இந்தக்கால பொண்ணுங்கள்லாம்...


கெட்ட காலம் பொறந்துடுச்சி
கேடுகெட்ட ஒலகத்துல - இவுக
பட்டாத்தான் புத்திவரும்
பாக்கத்தானே போறேன் நா!


===========================
- கிரிஜா மணாளன்

(Google "அன்புடன் குழும"த்தில் வெளியான
என் படைப்பு)

www.groups.google.com/group/anbudan

No comments: