Sunday, January 18, 2009

"சிறந்த நூல்களுக்கான சிறப்புப் பரிசு" பெற்றுள்ள எங்கள் படைப்பாளர்களைப் பாராட்டுகிறோம்!

"திருச்சி மாவட்ட நலநிதிக் குழு" ஆண்டுதோறும், மாவட்டத்திலுள்ள எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கி, கௌரவித்து வருகிறது.
அதன்படி, 2007, 2008 ஆண்டுகளுக்கான சிறந்த நூல்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 17.01.2009 அன்று திருச்சி மாநகரில் தமிழக அரசு சார்பில் நிகழ்ந்த "பொங்கல் கலைவிழா"வில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு அவர்கள் எழுத்தாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி. பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இவ்விழாவில் எங்கள் "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின், திருச்சி மாவட்டக் கிளையின் உறுப்பினர்களான கீழ்க்காணும் படைப்பாளர்கள் பரிசுகளைப் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறந்த சிறுகதை நூல்:

முதல் பரிசு: ரூ5000/- திரு. ஆங்கரை பைரவி சிறுகதை நூல்: "பின்னிருக்கையில் ஒரு போதி மரம்')

சிறந்த கவிதை நூல்:
இரண்டாம் பரிசு: ரூ. 3000/- திரு. கொட்டப்பட்டு சக்திவேலன் (கவிதை நூல்: "மனிதா! மனிதா!)

ஊக்கப் பரிசு: ரூ. 1000/- திருமதி. "ரத்திகா" (கவிதை நூல்: தேய்பிறையின் முதல் நாளிலிருந்து..)

சிறந்த சிற்றிதழ்:

இரண்டாம் பரிசு: திரு. த. சந்திரசேகரன் (ஆசிரியர் - "இனிய நந்தவனம்' மாத இதழ்)

------------------------------------------------------------------------------------
அனைவரையும் வாழ்த்துகிறோம்!


- கிரிஜா மணாளன்
செயலாளர் / திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620021.

மின்னஞ்சல்: girijamanaalanhumour.gmail.com

No comments: