Friday, January 2, 2009

விளை நிலங்கள்!


அறுவடை முடிந்ததும்
விற்பனைக்கு வந்தன
வீட்டு மனைகளாக
விளைநிலங்கள்!

- சி. கலைவாணி
அரியூர், வேலூர், தமிழ்நாடு.

Saturday, December 27, 2008

காலம்!


நீ சொல்வாயென்று நானும்
நான் சொல்வேனென்று நீயும்
நாள் கடத்தியதில்......
காலம் சொல்லிச் சென்றது
நாம் இழந்த காதலை!


- பி.கே. தங்கராஜ் (9994692452)
காஞ்சீபுரம், தமிழ்நாடு.

எருமை மாடுகள்!

சகதி நீர்
சாக்கடை நீர்
ஓடும் நீர் என
பேதம் பார்ப்பதில்லை
வெப்பம் தணிந்தால்போதுமென
புரண்டு எழுகின்றன
எருமை மாடுகள்!

- கவிஞர் ஆங்கரை பைரவி (9842633785)
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்-திருச்சி மாவட்டக்கிளை)
இலால்குடி. திருச்சி மாவட்டம்.

Friday, December 26, 2008

விபத்தில் மனிதநேயம்!

சாலையானது சாதி
விளையாடுகிறது விதி
விபத்தில் சிக்கி
வீழ்ந்தது
மனிதநேய மதி!

- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை, தமிழ்நாடு.

Wednesday, December 24, 2008

அமில மழை!


கத்தியின் பயனை
கைகள் தீர்மானிப்பதுபோல
மழையின் பயனை
மனசே தீர்மானிக்கிறது.
அன்று
உன்னோடு நனைகையில்
என்மீது பொழிந்த அந்த மழை
இன்று
என்மீது பொழிகிறது...
அமில மழை!

- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Tuesday, December 23, 2008

இன்னொருவனோடு.......


அப்பாவை கௌரவத்தோடு
அம்மாவை நிம்மதியோடு
தங்கையை மகிழ்ச்சியோடு
தம்பியைத் தன்மானத்தோடு
என்று எல்லோரையும்
வாழவைத்த நீ
என்னையும் வாழவைத்திருக்கிறாய்....
இன்னொருவனோடு!

- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Sunday, December 21, 2008

இத்தளத்தில் இதுவரை கவிதைகளை வழங்கியுள்ள கவிஞர்கள்....

அன்புடையீர், வணக்கம்.

இத்தளத்தில் இதுவரை கவிதைகளை வழங்கியுள்ள கவிஞர்களின் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு என் நன்றி.
அவர்களிடமிருந்தும், புதிய கவிஞர்களிடமிருந்தும் தொடர்ந்து கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நமது தஞ்சை மண்ணின் மைந்தர், கவிஞர் புகாரி (கனடா), அவர்களின் "அன்புடன் குழும" நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற்ற கவிஞர்களின் பெயர்ப் பட்டியல் விரைவில் இத்தளத்தில் வெளியாகும்.

அன்புடன்,
கிரிஜா மணாளன்.


"க்ளிக்" செய்து காண்க.

இவர்கள் தவிர, கீழ்க்காணும் நண்பர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன:

1. கோ. செல்வராஜ், திருச்சி.
2. எம். அக்பர், ஆர்.எஸ்.புரம், கோவை.
3. "விஸ்வாஸ்" (வசந்தி மெய்யப்பன்) இராசிபுரம்.
4. பி.கே.ராஜேஸ்வரி, பச்சப்பாளையம்.
--------------------------------------------