Saturday, December 27, 2008

காலம்!


நீ சொல்வாயென்று நானும்
நான் சொல்வேனென்று நீயும்
நாள் கடத்தியதில்......
காலம் சொல்லிச் சென்றது
நாம் இழந்த காதலை!


- பி.கே. தங்கராஜ் (9994692452)
காஞ்சீபுரம், தமிழ்நாடு.

எருமை மாடுகள்!

சகதி நீர்
சாக்கடை நீர்
ஓடும் நீர் என
பேதம் பார்ப்பதில்லை
வெப்பம் தணிந்தால்போதுமென
புரண்டு எழுகின்றன
எருமை மாடுகள்!

- கவிஞர் ஆங்கரை பைரவி (9842633785)
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்-திருச்சி மாவட்டக்கிளை)
இலால்குடி. திருச்சி மாவட்டம்.

Friday, December 26, 2008

விபத்தில் மனிதநேயம்!

சாலையானது சாதி
விளையாடுகிறது விதி
விபத்தில் சிக்கி
வீழ்ந்தது
மனிதநேய மதி!

- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை, தமிழ்நாடு.

Wednesday, December 24, 2008

அமில மழை!


கத்தியின் பயனை
கைகள் தீர்மானிப்பதுபோல
மழையின் பயனை
மனசே தீர்மானிக்கிறது.
அன்று
உன்னோடு நனைகையில்
என்மீது பொழிந்த அந்த மழை
இன்று
என்மீது பொழிகிறது...
அமில மழை!

- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Tuesday, December 23, 2008

இன்னொருவனோடு.......


அப்பாவை கௌரவத்தோடு
அம்மாவை நிம்மதியோடு
தங்கையை மகிழ்ச்சியோடு
தம்பியைத் தன்மானத்தோடு
என்று எல்லோரையும்
வாழவைத்த நீ
என்னையும் வாழவைத்திருக்கிறாய்....
இன்னொருவனோடு!

- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Sunday, December 21, 2008

இத்தளத்தில் இதுவரை கவிதைகளை வழங்கியுள்ள கவிஞர்கள்....

அன்புடையீர், வணக்கம்.

இத்தளத்தில் இதுவரை கவிதைகளை வழங்கியுள்ள கவிஞர்களின் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு என் நன்றி.
அவர்களிடமிருந்தும், புதிய கவிஞர்களிடமிருந்தும் தொடர்ந்து கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நமது தஞ்சை மண்ணின் மைந்தர், கவிஞர் புகாரி (கனடா), அவர்களின் "அன்புடன் குழும" நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற்ற கவிஞர்களின் பெயர்ப் பட்டியல் விரைவில் இத்தளத்தில் வெளியாகும்.

அன்புடன்,
கிரிஜா மணாளன்.


"க்ளிக்" செய்து காண்க.

இவர்கள் தவிர, கீழ்க்காணும் நண்பர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன:

1. கோ. செல்வராஜ், திருச்சி.
2. எம். அக்பர், ஆர்.எஸ்.புரம், கோவை.
3. "விஸ்வாஸ்" (வசந்தி மெய்யப்பன்) இராசிபுரம்.
4. பி.கே.ராஜேஸ்வரி, பச்சப்பாளையம்.
--------------------------------------------

Thursday, December 11, 2008

எழுதுகோல்!


கௌரவிக்கப்பட்டது
எழுதிய முதல் கவிதை
எங்கே மரித்துப்போனதோ
முதல் கவிதைக்கு
உயிர்தந்த அந்த
எழுதுகோல்!

- தே. ரம்யா, கொட்டக்குளம்
திருவண்ணாமலை, தமிழ்நாடு.

முதல் "விருந்தினர்'!


அரசியல் மாநாட்டு விருந்து
எல்லோரையும் அழைத்தார்கள்...
முதலில் வந்தது
ஆடு!

- கோ. செல்வராஜ் (9843334347)
திருச்சி 6200002, தமிழ்நாடு.

சருகுகளின் சரணாலயம்!



சந்ததிகளை ஈன்ற
சருகுகளின் சரணாலயம்...
முதியோர் இல்லம்!

- எம். அக்பர் (9894303726)
ஆர்.எஸ்.புரம், கோவை, தமிழ்நாடு.

ஏக்கம்!


நீ ஏற்றிவைத்ததில் அணைந்துபோன
சில விளக்குகளின் சூட்சுமம்
விளங்கவில்லை உனக்கு...
அவை ஏங்குகின்றன
பொன்னொளி மின்னும்
உனது விரல்களை
மீண்டும் அருகில் பார்க்க!

- வசந்தராஜா (9894303726)
நெய்வேலி, தமிழ்நாடு

Sunday, December 7, 2008

மின்விசிறி!


எதையோ எழுத நினைத்து
எதையெதையோ எழுதினேன்,
எதுவும் எனக்கே புரியாதபோது...
இமைமூடி இருளில்
தொலைந்தேன்.
யாருக்கும் தெரியாமல்
எழுதாத பக்கங்களையும்
இருளில் புரட்டிப் புரட்டிப்
படிக்கிறது
என் வீட்டு மின்விசிறி!

தே.ரம்யா,கோட்டக்குளம்
தமிழ்நாடு.

பைத்தியக்காரன்!



ஒதுக்கப்படுவதை நினைத்து வருந்தி
சிருஷ்டித்துக்கொள்கிறான்
சில கதாபாத்திரங்களாய்
தன் உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ள,
'பைத்திய'மென்று விளிக்கப்படும்
அவன்!

- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

Wednesday, December 3, 2008

பாத்திரமறிந்து.......


அழுக்காய் பிச்சைப் பாத்திரம்
அலங்காரமாய் கோயில் உண்டியல்...
பாத்திரமறிந்து
பிச்சையிடும் பக்தர்கள்!

- அ. ராஜீவ் காந்தி, (9786098440)
செங்கம், தமிழ்நாடு.

தீக்குச்சி!


அறை முழுவதும் வெளிச்சம்
உயிர்பெற்ற தீபம்
மரணப்படுக்கையில்....
தீக்குச்சி!

- தே. ரம்யா, கொட்டக்குளம்
திருவண்ணாமலை, தமிழ்நாடு.

ருசியின்றி....


மரநிழலில் அறுசுவை உணவு
ருசிக்கவில்லை
கவனம் முழுவதும்
மேலிருந்து பறவை எச்சம்
தட்டில் விழாமல்
பார்த்துக்கொள்வதிலேயே...!

- வசந்தி மெய்யப்பன் (விஸ்வாஸ்)
இராசிபுரம், தமிழ்நாடு.

Monday, December 1, 2008

அம்மா!


எந்த மழையிலும் நான்
நனைந்ததே இல்லை.
முதல் தூறல் விழும் முன்பே
முந்தானை கொண்டு
மூடிவிடும்
என் 'அம்மா'வால்!

- அ. ராஜீவ்காந்தி (9786098440)
செங்கம், தமிழ்நாடு.